கடந்த ஜூன் 8-ம் தேதி பணமதிப்பீட்டு கொள்கை ஆய்வுக்கு பின், ரூ.1.8 லட்சம் கோடி மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுகள் திரும்பி வந்ததாக RBI கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்து இருந்தார். இது புழக்கத்திலிருந்த மொத்த 2000 ரூபாய் நோட்டுகளில் 50% ஆகும். இவற்றில் சுமார் 85 சதவீதம் வங்கிக்கிளைகளில் டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது.

மீதம் உள்ளவை பிற மதிப்புகளின் நோட்டுகளாக மாற்றப்பட்டது. இந்நிலையில் இப்போது 72% 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில், ரூ.2.62 லட்சம் கோடி மதிப்புள்ள இந்த உயர் மதிப்புடைய 2000 ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டுள்ளது (அல்லது) வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என சொல்லப்படுகிறது.