மக்கள் பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்காக ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் இன்று பல ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. பஹாங்கா பஜார் ரயில் நிலையத்தில் தண்டவாளப் பணிகள் நடைபெறுவதால் காரக்பூர் – பத்ரக் வழித்தடத்தில் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷாலிமார் – ஹைதராபாத் (18045), செகந்திராபாத் – திப்ருகார் (07046), செகந்திராபாத் – அகர்தலா, திருப்பதி – சந்த்ராகாச்சி, ஈஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ், சந்த்ராகாச்சி – தாம்பரம் (22841), எர்ணாகுளம் – ஹாவ் (22878) ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.