சாலையோர வியாபாரி ஒருவர் சேறும் சகதியுமாக இருக்கும் சாக்கடை வடிகால் தண்ணீரில் பழங்களை மீண்டும் மீண்டும் முக்கி எடுத்து விற்கும் அதிர்ச்சி வீடியோ ‘எக்ஸ்’ (X) மற்றும் இன்ஸ்டாகிராமில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. ஏதோ சுத்தமான தண்ணீரில் கழுவுவது போல அந்த அசுத்தமான நீரிலேயே பழங்களைக் கழுவி வியாபாரி அடுக்கும் இந்த விசித்திரக் காட்சி, சோஷியல் மீடியாவில் பழங்கள் வாங்குவதற்கே மக்களுக்குப் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

​இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், “இதனால்தான் நம்ம ஊர் அம்மாக்கள் பழங்களை சயின்ஸ் லேப்ல டெஸ்ட் பண்ற மாதிரி அத்தனை தடவை கழுவி தர்றாங்க” என்று ஒரு பக்கமும், “இனிமேல் ரோட்டோரக் கடைகளில் வெட்டி விற்கும் பழங்களைச் சாப்பிடவே மாட்டேன்” என்று மறுபக்கமும் தங்களது குமுறல்களைக் கொட்டி வருகின்றனர். மக்களின் ஆரோக்கியத்தோடு விளையாடும் இதுபோன்ற செயல்களுக்கு உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஏன் இன்னும் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் நெட்டிசன்கள் தங்களது கடுமையான ஆத்திரத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.