ஊராட்சியின் பொது நிதியிலிருந்து ₹7,19,000 மக்கள் பணத்தைச் சுரண்டி, 300 முதல் 400 வீடுகள் இருக்கும் மெயின் ரோட்டைப் பல வருடங்களாகக் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டு, ஒரே ஒரு சொகுசு வீட்டிற்காக மட்டும் 200 அடி நீளத்திற்குத் தார் மற்றும் கான்கிரீட் ரோடு போடப்பட்டுள்ளதாக எக்ஸ் (X) தளத்தில் வெளியான வீடியோ ஒன்று பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அந்த வீடியோவை வெளியிட்ட நபர், பல குடும்பங்கள் வரிசையாக வசிக்கும் பகுதிகளுக்குப் பல வருடங்களாகியும் எந்த ஒரு அடிப்படைச் சாலையும் அமைத்துத் தரப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
ஒரே ஒரு வீட்டுக்கு 7 லட்சத்தில் சிமெண்ட் ரோடு#dmk அப்போ யாரு தான் vote போட்டது.. எல்லாரும் திட்டிட்டு இருக்கீங்க 😂😂😂 pic.twitter.com/6fIhtiRfDH
— Subha (@Vasisubha1) May 29, 2026
ஆனால், அந்த ஒரே ஒரு குறிப்பிட்ட வீட்டில் ஒரு அரசு ஊழியர் வசிப்பதாகவும், அதிகார செல்வாக்கைப் பயன்படுத்தி அவருக்காக மட்டுமே இந்த ரோடு போடப்பட்டுள்ளதாகவும் ஆதாரத்துடன் வீடியோவில் போட்டு உடைத்துள்ளார். பொதுமக்களின் வரிப்பணத்தை இப்படி அநியாயமாக ஒரு தனி நபருக்காக வாரி இறைத்திருக்கும் இந்த வினோத சம்பவம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி, நெட்டிசன்களின் கடுமையான ஆத்திரத்தைத் தூண்டியுள்ளது.
