தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற கோவை சிறுமி கொலை சம்பவத்தை முன்வைத்து, எக்ஸ் (X) தளத்தில் தவெக அரசை விமர்சித்திருந்த எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின், “சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற டைம் எல்லாம் கொடுக்க முடியாது, இதையெல்லாம் தமிழ்நாடு தாங்காது” என்று காட்டமாகப் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக தமிழக வெற்றிக் கழகத்தினர் (தவெக) 2021-ஆம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பழைய பேட்டி ஒன்றின் வீடியோவை எடுத்து சமூக வலைதளங்களில் மரண மாஸாக வைரலாக்கி வருகின்றனர்.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற புதிதில், சட்டம் ஒழுங்கு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, “திமுக ஆட்சிப் பொறுப்பேற்று வெறும் 120 நாட்கள் (4 மாதம்) தான் ஆகிறது, இந்த குறுகிய காலத்திற்குள் எதையும் செய்துவிட முடியாது” என்று உதயநிதி பேசிய வீடியோ தான் அது. ”திமுக ஆட்சியில் இருந்தபோது சட்டம் ஒழுங்கை சரிசெய்ய வெறும் 4 மாசம் தான் ஆச்சுன்னு டைம் கேட்டீங்க… ஆனா இப்போ விஜய் ஆட்சியைப் பார்த்து டைம் எல்லாம் கொடுக்க முடியாதுன்னு சொல்றீங்களா?” என்று தவெகவினர் இந்த வீடியோவை தற்போதைய எக்ஸ் பதிவோடு ஒப்பிட்டு இணையத்தில் கொளுத்திப் போட்டுள்ளனர்.
திமுக ஆட்சியில்..
"வெறும் 120 நாள்(4 மாசம்) ஆச்சு"விஜய் ஆட்சியில்..
"டைம் எல்லாம் கொடுக்க முடியாது"இந்த டூபாக்கூரை ஏன் பொது மக்களுக்கு பிடிக்கல என இப்ப நல்லா புரியுது. Pure வன்மம்.
இவனுக்கு மக்கள் மேல அக்கறை எல்லாம் இல்ல. விஜய் மேல காண்டு!#dmk #admk #vck #tvk #tvkvijay #bjp pic.twitter.com/Hxzb2lt2D3
— Bhim Prabha Gandhi 🕊✨ (@BhimROCKY) May 29, 2026
தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே எதிர்க்கட்சிகள் இப்படி இரட்டை நிலைப்பாட்டுடன் விமர்சிப்பது நியாயமில்லை என்று கூறி, நெட்டிசன்கள் இந்த வீடியோவை தங்களது பக்கங்களில் பகிர்ந்து திமுக தரப்பை இணையத்தில் வறுத்தெடுத்து வருகின்றனர். இந்த ‘கடந்த கால பேட்டி வெர்சஸ் தற்போதைய எக்ஸ் பதிவு’ விவகாரம் தற்போது தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
