வியட்நாம் நாட்டில் உள்ள ஒரு மருந்தகம் (Pharmacy) கடையைப் பூட்டுவதற்குத் தயாரான நேரத்தில், திடீரென ஒரு நபர் ராக்கெட் வேகத்தில் ஷட்டருக்கு அடியில் தவழ்ந்து உள்ளே புகுந்த சம்பவம் அங்கிருந்த ஊழியர்களை அலறவிட்டுள்ளது. நள்ளிரவு நேரத்தில் மின்னல் வேகத்தில் உள்ளே நுழைந்த அந்த நபரைப் பார்த்த பெண் ஊழியர்கள், ஏதோ பெரிய கொள்ளையடிக்க வந்த திருடன் என்று நினைத்துப் பயந்து நடுங்கி, கடையை விட்டு வெளியே ஓடப் பார்த்துள்ளனர். ஆனால், அதன் பிறகுதான் அந்த நபர் உள்ளே புகுந்ததற்கான உண்மையான மற்றும் விசித்திரமான காரணம் தெரியவந்துள்ளது.
في فيتنام: صيدلية كانت على وشك الإغلاق، وفجأة زحف رجل بسرعة صاروخية من تحت الباب واخاف الجميع واعتقدت الموظفات انه لص
لكن اتضح لاحقا أنه لم يكن يريد السرقة، بل جاء لإنقاذ نفسه… كان يريد شراء أغراض لزوجته ولو عاد بدونها ستوبخه حتى الصباح pic.twitter.com/069UKeYExZ
— Saif (@diol2n) May 28, 2026
அவர் கடைக்குள் வந்தது திருடுவதற்காக அல்ல, மாறாகத் தன் மனைவி கேட்ட சில முக்கியமான பொருட்களை வாங்குவதற்காகவே அவர் கடை மூடப்படும் நேரத்தில் அப்படி ஓடி வந்துள்ளார். ஒருவேளை அந்தப் பொருட்களை வாங்காமல் வீட்டிற்கு வெறும் கையோடு திரும்பியிருந்தால், விடிய விடியத் தன் மனைவி வாயாலேயே வறுத்தெடுத்து விடுவார் என்ற பயத்தில்தான், மானத்தைப் பார்க்காமல் ஷட்டருக்கு அடியில் புகுந்துள்ளார். இந்த வினோதமான சிசிடிவி (CCTV) காட்சிகள் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி உலகளவில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
