மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் பெஹாலா பகுதியில், மனிதநேயமற்ற மற்றும் வக்கிரம் நிறைந்த ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. பர்ணாஸ்ரீ (Parnashree) பகுதியில் உள்ள பெச்சாரம் சாட்டர்ஜி சாலையில் வசிக்கும் ஜௌதுல் ஹாசன் (Joudul Hassan) என்ற நபர், இரவு நேரங்களில் தெரு நாய்களிடம் பாலியல் ரீதியான அத்துமீறல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த சில நாட்களாக நாய்களின் நடத்தையில் மாற்றம் மற்றும் காயங்களைக் கண்ட அப்பகுதி பெண்கள், அந்த நபர் மீது சந்தேகம் கொண்டு தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.

​சனிக்கிழமை இரவு, அந்த நபர் ஒரு நாயிடம் மிகக் கொடூரமான முறையில் வக்கிரமாக நடந்து கொண்டபோது, அங்கிருந்த பெண்கள் அவரைச் சூழ்ந்து கையும் களவுமாகப் பிடித்தனர். இந்தத் தகவல் பரவியதும் விலங்கு நல ஆர்வலர்களும் பொதுமக்களும் அங்கு திரண்டு கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர். உடனடியாக இடத்திற்கு வந்த பர்ணாஸ்ரீ போலீசார், அந்த நபரை மக்கள் ஆக்ரோஷத்திடமிருந்து மீட்டு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். தற்போது அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். “இப்படிப்பட்ட வக்கிர புத்தி கொண்டவர்களுக்குச் சட்டப்படி மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்” என்று அப்பகுதி மக்கள் கொந்தளிப்புடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.