சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினம்தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகளின் வீடியோக்களுக்கு பஞ்சமே இல்லை. தினம்தோறும் குழந்தைகள் பற்றிய ஏதாவது ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வர இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமும் உள்ளது. பொதுவாகவே குழந்தைகள் இருக்கும் வீட்டில் எப்போதும் சந்தோஷத்திற்கு பஞ்சம் இருக்காது. குழந்தைகள் செய்யும் சிறு சிறு செயல்கள் கூட பெரியவர்களின் கவலையை போக்கிவிடும்.

தன்னுடைய செயல்களாலும் சுட்டித்தனத்தாலும் ஒட்டுமொத்த குடும்பத்தின் மகிழ்ச்சியை குழந்தைகள் கட்டிப்போட்டு வைக்கின்றனர். இவர்களுடன் வீட்டில் உள்ள செல்லப்பிராணிகள் சேர்ந்து கொண்டால் இன்னும் மகிழ்ச்சிக்கு பஞ்சமே இருக்காது. தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் குழந்தை ஒன்று செய்த காரியம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதாவது ஐஸ்கிரீமை ஸ்பூன் எதிலும் எடுத்து சாப்பிடாமல் தனது காலை வைத்து தொட்டு சாப்பிடுகிறது. இந்த அட்டகாசமான வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.