வயிற்றுப் பிழைப்புக்காக மனிதர்கள் மட்டும்தான் படாதபாடு பட வேண்டும் என்பதில்லை, அது விலங்குகளுக்கும் பொருந்தும் போலிருக்கிறது என்பதை உணர்த்தும் வகையில் ஒரு சுவாரசியமான வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. பொதுவாக மரத்திற்கு மரம் தாவி, மக்களின் வீடுகளில் இருக்கும் பொருட்களைத் திருடிச் செல்லும் குரங்குகள், தற்போது ‘தொழில்’ செய்யத் தொடங்கிவிட்டன.
View this post on Instagram
இணையத்தில் வைரலாகும் அந்தப் பதிவில், ஒரு குரங்கு மிகவும் கூலாக பஞ்சர் கடை ஒன்றில் உட்கார்ந்து கொண்டு, அங்கிருக்கும் சைக்கிள் டயரைத் தடவிப் பார்த்து பஞ்சர் எங்குள்ளது என்று தேடுகிறது. இதைப் பார்க்கும் போது, “தினமும் சும்மா மரத்துல குதிச்சா மட்டும் பத்தாது மச்சான், பொழப்ப ஓட்ட ஏதாவது வேலை செய்யணும்” என்று அது தன் கூட்டாளிகளிடம் சொல்வது போல அச்சு அசலாக ஒரு மெக்கானிக் போலவே காட்சியளிக்கிறது.
இந்த வைரல் வீடியோவில், தலைகீழாகக் கவிழ்த்துப் போடப்பட்டிருக்கும் சைக்கிள் டயரை ஒரு அந்தக்குரங்கு தனது கைகளால் சுழற்றிச் சுழற்றிப் பார்க்கிறது. சில சமயம் டயரை அமுக்கியும், ரிம்களைத் தொட்டும் அது காட்டும் தீவிரமான கவனம், அதற்கு இந்த வேலையில் ஏதோ நீண்ட அனுபவம் இருப்பது போன்ற மாயையை ஏற்படுத்துகிறது. ஆரம்பத்தில் சமத்தாக வேலை பார்க்கும் இந்த மெக்கானிக் குரங்கு, போகப்போகத் தனது சுயரூபத்தைக் காட்டி வால்தனத்திலும் ஈடுபடுகிறது. டியூபை வாயில் கடிப்பது, இழுத்துப் பார்ப்பது என அது செய்யும் சேட்டைகளைக் கண்டு கடந்து செல்வோர் தங்களின் சிரிப்பை அடக்க முடியாமல் தவிக்கின்றனர். “காட்டுக்குள்ளும் கடுமையான பொருளாதார மந்தநிலை வந்துவிட்டது போல” என நெட்டிசன்கள் இந்த வீடியோவிற்கு விதவிதமாக மீம்ஸ்களைப் பறக்கவிட்டு வருகின்றனர்.
