மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில், வரும் சட்டசபை தேர்தலில் திமுக மற்றும் தவெக இடையே நேரடி போட்டி இருக்கும் என விஜய் பேசினார். மேலும், “நான் மார்க்கெட் போன பிறகு அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை; படைக்கலனோடு வந்துள்ளேன்” என்ற அவரது கருத்து அரசியல் பரப்பை கிளப்பியது.
இதுதொடர்பாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் மநீம தலைவர் கமல்ஹாசன், “என் பெயரை குறிப்பா சொன்னாரா? முகவரி இல்லாத கடிதத்துக்கு நான் பதில் சொல்ல முடியாது. அவர் என் தம்பிதான்” என சிரித்தபடி நிதானமாக பதிலளித்தார்.
