முதல்முறையாக 2026 சட்டமன்றத் தேர்தலை சந்திக்கவிருக்கும்  தமிழக  வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு நேற்று  (ஆகஸ்ட் 21) மதுரை பாரபத்தியில் லட்சக்கணக்கான தொண்டர்களின் பேராதரவுடன்  நடைபெற்றது.

இந்த மாநாட்டில் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதை கண்டிக்கும் தீர்மானம், தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும் என்ற வலியுறுத்தல், மீனவர்களின் கைது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளை கண்டிக்கும் தீர்மானம், ஆணவக் கொலைகளை தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கை, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு குறித்து திமுக அரசை குற்றஞ்சாட்டும் தீர்மானம் மற்றும் TNPSC மூலம் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்ற முடிவுகள் என மொத்தம் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த தீர்மானங்கள் அனைத்தும் மக்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வரையறுக்கப்பட்டு இருக்கின்றன.