சமூக வலைதளங்களில் ஒன்றாகிய இன்ஸ்டாகிராமில் வெளியாகி இருக்கும் ஒரு காணொளி காண்போரை உறைய வைத்துள்ளது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஜேசிபி இயந்திரம் கொண்டு மண்ணைத் தோண்டும் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக மணலுக்கு அடியில் இருந்து ஒரு பாம்பு வெளியே வந்தது. இதைப் பார்த்த அங்கிருந்த சிறுவர்கள் சற்றும் பயப்படாமல் அந்தப் பாம்பைப் பிடிக்க முயன்றனர்.

​அதில் ஒரு சிறுவன் மிகவும் லாவகமாகப் பாம்பின் தலையைப் பிடித்து, அதனைத் தனது தலைக்கு மேலே சுற்றி விளையாடினான். அத்துடன் நிறுத்தாமல், அந்தப் பாம்பைத் தனது கழுத்தைச் சுற்றி மாலையாகப் போட்டுக் கொண்டு, கைகளில் பிடித்தபடி அந்தப் பகுதி முழுவதும் சுற்றித் திரிந்தான். பார்ப்பதற்கே மிகவும் ஆபத்தானதாக இருக்கும் இந்தக் காட்சியில், அந்தச் சிறுவன் சற்றும் அச்சமின்றிச் செயல்படுவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சிறுவயதில் இவ்வளவு துணிச்சலா என்று நெட்டிசன்கள் பலரும் இந்தக் காணொளியைப் பார்த்து வியந்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். அதே வேளையில், இத்தகைய செயல்கள் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதால் இவ்வாறான செயல்களில் ஈடுபடக் கூடாது என்றும் பலரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.