மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில், பாஜக மண்டலத் தலைவர் புல்கித் டண்டன் என்பவர் ஒரு இளம்பெண் மற்றும் அவரது தாயாரை நள்ளிரவில் கொடூரமாகத் தாக்கியதாகப் புகார் எழுந்துள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு தனது ஆதரவாளர்களுடன் அந்தப் பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த புல்கித் டண்டன், எந்தக் காரணமும் இன்றி தகாத வார்த்தைகளால் பேசி, தாய்-மகள் இருவரையும் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் காயமடைந்த இருவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
लाड़ली बहना के पोस्टर, भाषण और जुमले लेकिन ज़मीन पर बहन-बेटियों से मारपीट और धमकी!
सतना के नागौद में भाजपा मंडल अध्यक्ष पुलकित टंडन ने एक मां बेटी से बर्बरता से मारपीट की! संगठन की गुंडई को संरक्षण देती सत्ता में सीसीटीवी फुटेज के बावजूद पुलिस शिकायत दर्ज नहीं कर सकी! pic.twitter.com/z2yEIpEftu
— MP Congress (@INCMP) January 28, 2026
இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள போதிலும், அதிகார பலத்தைப் பயன்படுத்திப் புகாரைத் திரும்பப் பெற அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள காங்கிரஸ் கட்சி, “மேடையில் ‘லாட்லி பெஹ்னா’ (அன்புச் சகோதரிகள்) எனப் பேசும் பாஜகவின் உண்மை முகம் இதுதான்” எனக் கடுமையாகச் சாடியுள்ளது. ஒரு ஆளுங்கட்சிப் பிரமுகர் மீது இவ்வளவு தெளிவான ஆதாரங்கள் இருந்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தயங்குவது பொதுமக்களிடையே பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
