சமூக வலைதளத்தில் வெளியான ஒரு காணொளி பார்ப்பவர்களைச் சிரிக்க வைத்து, ரசிக்கும்படி உள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்தக் காணொளியில், நான்கு குழந்தைகளுடன் ஒரு வாத்து ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்கிறது. குழந்தைகள் ஓடத் தொடங்கியவுடன், வாத்து முன்னே செல்ல வேண்டும் என்பதற்காக பறந்து, குழந்தைகளை முந்துகிறது.

பந்தயத்தின் இலக்கை அடையும் நேரத்தில், வாத்து மீண்டும் தரையில் இறங்கி, ஓட ஆரம்பிக்கிறது. இந்த போட்டியில் வாத்து மூன்றாம் இடத்தை பிடிக்கிறது. இந்த வேடிக்கையான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி, இப்படி ஒரு “அழகான சீட்டிங்” என்று இணையவாசிகள் கலகலப்பாக கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.