சமூக வலைதளத்தில் வெளியான ஒரு காணொளி, ஒருவருக்கு ஆபத்து நேர வேண்டும் என்றால் எவ்வளவு பாதுகாப்பாக இருந்தாலும் அது நடந்துவிடும் என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்தக் காணொளியில், ஒரு கட்டிடத்தை இடிக்கும் பணி நடக்கிறது. அதை வெகு தொலைவில் இருந்து ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டு, காணொளியாகவும் பதிவு செய்கிறது. அந்தக் கூட்டத்தில் கோபால் என்ற நபரும் நின்று கொண்டிருக்கிறார்.

View this post on Instagram

A post shared by @hiddentruth1_

கட்டிடத்தை இடிக்கத் தொடங்கியவுடன், அவ்வளவு தொலைவில் இருந்தும், இடிந்த கட்டிடத்தில் இருந்து ஒரு கல் பறந்து வந்து, கூட்டத்தில் நின்ற கோபாலின் மீது பட்டு அவரைக் காயப்படுத்துகிறது. இந்த அதிர்ச்சியூட்டும் காணொளியைப் பார்த்த பலரும், ஆச்சரியத்துடன் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.