இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமானவர் M.S  தோனி. இவருக்கு எந்தளவிற்கு கிரிக்கெட் மீது நாட்டம் இருக்கிறதோ அதே அளவிற்கு  பைக் மற்றும் கார்கள் மீதும் அதிக  நாட்டம் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இதனால் இவர் சமீபத்தில் ரோல்ஸ் ராய்ஸ் காரை ஓட்டிச்சென்ற வீடியோ இணையத்தில் வெளியானது. சமீப நாட்களாகவே தோனி குறித்த ஒரு சில தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்தவகையில் தற்போது அவருடைய பண்ணை வீடு குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது 7 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட அவரது பண்ணை வீடு ரூ.6 கோடி மதிப்புடையதாகவும், ராஞ்சியின் ரிங் ரோட்டில் அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பறந்த பண்ணை வீடு பல்வேறு வசதிகளையும் அம்சங்களையும் கொண்டுள்ளது. அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. மேலும், ரசிகர்கள் வீட்டிற்கு வெளியே அவரை பார்க்க நிற்பது வழக்கமாகிவிட்டது.