இன்றைய காலகட்டத்தில் சாமானிய மக்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவருமே இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வருகிறார்கள். இதில் பதிவுகள் மூலம் அதிக வருமானம் ஈட்டும் பிரபலங்கள் குறித்த தகவல்களை ஹாப்பர் ஹெச் க்யூ என்ற நிறுவனம் வெளியிட்ட நிலையில் அதில் விளையாட்டு வீரர்களாக இருந்து பிரபலமானவர்களில் முதல் மூன்று இடங்களில் ரொனால்டோ, மெர்சி மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அதில் ரொனால்டோ ஒரு பதிவுக்கு 26.76 ரூபாயும், மெர்சி 21.49 ரூபாயும், விராட் கோலி ஒரு பதிவுக்கு 11.45 கோடி ரூபாயும் வாங்குவது தெரிவிக்கப்பட்டது.

அதே சமயம் இன்ஸ்டாகிராம் மூலம் அதிக நபர்கள் பின்தொடரும் இந்தியர் என்ற சாதனையையும் விராட் கோலி பிடித்துள்ளார். மேலும் அதிக வருமானம் ஈட்டும் இந்தியர் என்ற சாதனையை விராட் கோலி படத்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் இது உண்மை இல்லை என்று விராட் கோலி தன்னுடைய twitter பக்கத்தில் தெரிவித்துள்ளார். வாழ்க்கையில் நான் பெற்ற அனைத்திற்கும் நன்றி உள்ளவனாக கடமைப்பட்டவனாக இருக்கிறேன். ஆனால் சமூக வலைத்தளத்தில் நான் ஒரு பதிவுக்கு சம்பாதிக்கும் பணம் தொடர்பாக வெளியான செய்தி உண்மை இல்லை என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.