போரையே 2 நாட்கள் நிறுத்தி வைத்த கால்பந்து விளையாட்டு குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

சாப்பிடுவது, வேலைக்கு செல்வது, ஓய்வெடுப்பது, தூங்குவது பின் மறுநாள் மீண்டும் எழுந்து சாப்பிடுவது, வேலைக்கு செல்வது, ஓய்வெடுப்பது, தூங்குவது என வாரம் முழுவதும் ஒரே மாதிரியான சுழற்சி வாழ்க்கையில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இப்படியான வாழ்க்கை கடும் சோர்வை நமக்கு அளிக்கும் தருணத்தில், வார இறுதி நாளில் நம்மை ரிலாக்ஸ் செய்து சோர்வில் இருந்து வெளியே கொண்டு வந்து புத்துணர்ச்சியை நாம் பெற நமக்கு ஏதேனும் ஓர் அருமையான பொழுதுபோக்கு தேவைப்படுகிறது.

அது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். அது சினிமா, விளையாட்டு, குடும்பத்துடன் நேரம் செலவிடுவது என எதுவாயினும் இருக்கலாம். பெரும்பாலானோர் சினிமா, ஸ்போர்ட்ஸ் இவை இரண்டுமே சிறந்த பொழுதுபோக்காக இருப்பதாக நம்புகின்றனர். இப்படியான சினிமா, ஸ்போர்ட்ஸ் போன்ற பொழுதுபோக்குகள் மனித வாழ்வில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தி விட முடியும் என்ற கேள்வி எழுந்தால்? ஒரு அசத்தலான சம்பவம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

1967-ல் நைஜீரியா நாட்டில் உள்நாட்டு போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பயங்கரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த அந்தப் போரின் போது கால்பந்து போட்டி ஒன்று நடைபெற இருந்தது. தற்போது ரெனால்டோ, மெஸ்ஸி என உலகப் புகழ்பெற்ற கால்பந்து விளையாட்டு வீரர்கள் இருப்பது போலவே, அப்போது பீலே  என்னும் விளையாட்டு வீரர்  பிரபலமாக இருந்தார்.

அவரது விளையாட்டை காண உள்நாட்டு போரில் ஈடுபட்டிருந்த இரு தரப்பு நைஜீரியா மக்களும் ஆர்வமாக இருந்ததன் காரணமாக, போர் இரண்டு நாட்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. ஒரு விளையாட்டு வீரரின் விளையாட்டை காண்பதற்காக போர் நிறுத்தி வைக்கப்பட்டு மக்கள் ஒன்று சேர்ந்திருக்கிறார்களேயானால் சினிமா, ஸ்போர்ட்ஸ் உள்ளிட்ட  பொழுதுபோக்கு அம்சங்களால் பல நல்ல மாற்றங்களையும் நிகழ்த்த முடியும் என்பதில் சந்தேகம் இல்லை.