புகைப்படங்களை தவறாக சித்தரித்து ப்ளாக் மெயில் செய்யும் மோசடி கும்பலிடமிருந்து தற்காத்து கொள்வதற்கான செயல்முறை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

இன்றைய காலகட்டத்தில் அனைவரிடமும் மொபைல் போன் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதிலும் சமூக வலைதளத்தில் அக்கவுண்ட் வைத்திருக்காத நபர்களே இல்லை. கண்டிப்பாக ஏதாவது ஒரு சோசியல் மீடியா அக்கவுண்ட் அவர்களிடம் இருக்கும். அதில் அவர்களுடைய புகைப்படத்தை அவர்கள் லைக்காக ஷேர் செய்யவும் ஆசைப்படுகிறார்கள். அப்படி ஷேர் செய்யப்படும் புகைப்படங்களை எடுத்து சில மோசடி கும்பல்கள் எடிட் செய்து  ஆடை இல்லாமல் மோசமான  நிலையில் சித்தரித்து சம்பந்தப்பட்ட நபர்களிடம் அந்த புகைப்படத்தை காட்டி பணம் கேட்டு பிளாக்மெயில் செய்யும் மோசமான நிகழ்வுகள் ஏராளம் கண்டிருப்போம்.

இதனால் பல குடும்பங்கள் பல இன்னல்களை சந்தித்திருக்கிறது. ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் என்று சொல்லப்படும் AI  தொழில்நுட்பம் வந்த பிறகு இம்மாதிரியான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரு வழிமுறையை இந்த செய்தி தொகுப்பில் காணலாம். https://stopncii.org/ என்ற இணையதளத்தில் சென்று மோசமாக சித்தரிக்கப்பட்ட புகைப்படத்தையும் அதற்கான ஒரிஜினல் புகைப்படத்தையும் அப்லோட் செய்து அதை நீக்கும்படி ரெக்வஸ்ட் செய்தால்,

அந்த புகைப்படம் இன்டர்நெட்டில் எங்கெல்லாம் பதிவு செய்யப்பட்டிருந்ததோ அங்கெல்லாம் முழுமையாக அப்புகைப்படத்தை நீக்கிவிடும். இன்டர்நெட்டிலிருந்து நீக்கப்பட்டு விட்டதே என நிதானம் கொள்ளாமல், இது போன்ற மோசமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது உடனடியாக சைபர் கிரைமில் புகார் அளித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்வதே நிரந்தர தீர்வாக அமையும்.