ஜப்பானிய வயது வந்த பெண்களில் சுமார் 42 சதவீதம் பேர் குழந்தை பெற்றெடுக்க விரும்பவில்லை என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது ஜப்பான் நாட்டின் சமூக பாதுகாப்பு திட்டத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையும் என்று பிரபல நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜப்பானின் தேசிய மக்கள் தொகை மற்றும் சமூக பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் கடந்த 25ஆம் ஆண்டில் பிறந்த பெண்களில் 33.4 சதவீதம் குழந்தைகளை பெற்றெடுக்காமல் இருப்பது குறிப்பிடுகின்றது. அது மட்டுமல்லாமல் திருமணம் ஆகாத ஆண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் எனவும் அந்த அறிக்கை கூறுகின்றது. எதிர்காலம் தொடர்பான குறித்த நிச்சயமற்ற தன்மை மற்றும் குறைந்த ஊதியம் போன்றவை தான் இதற்கு காரணமாகவும் கூறப்படுகின்றது.