நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் மாதாந்திர விடுமுறை பட்டியலை முந்தைய மாத இறுதி நாட்களில் ரிசர்வ் வங்கியானது வெளியிட்டு வருகிறது. அந்த அடிப்படையில் இப்போது ஏப்ரல் மாதத்துக்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டு உள்ளது. அடுத்த மாதம் ஏப்ரலில் எந்தெந்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை என்ற விவரம் தற்போது வெளியாகி உள்ளது.

அந்த வகையில் ஏப்ரல்-1 (சனி) ஆண்டு கணக்கு முடிக்கும் நாள், ஏப்ரல்-4 (செவ்வாய்) மகாவீர் ஜெயந்தி, ஏப்ரல்-7 புனித வெள்ளி, ஏப்ரல்-8 மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை, ஏப்ரல்-14 (வெள்ளி) தமிழ் புத்தாண்டு, ஏப்ரல்-22 (சனி) ரம்ஜான், 4-வது சனிக்கிழமை ஆகிய நாட்கள் விடுமுறை. இவை தவிர்த்து 5 ஞாயிற்றுக்கிழமை விடுமுறை இருக்கிறது.