ரிசர்வ் வங்கி ஏப்ரல் மாதத்தில் ரெப்போ வட்டி விகிதத்தினை 25 புள்ளிகள் உயர்த்தும் என்று பேங்க் ஆப் பரோடாவின் தலைமை பொருளாதார நிபுணர் மதன் சப்னாவிஸ் தெரிவித்து இருக்கிறார். கடந்த வாரம் தான் அமெரிக்காவின் பெடரல் வங்கி வட்டி விகிதத்தினை உயர்த்தியது.

அதேபோன்று இந்தியாவின் பணவீக்கம் கட்டுக்குள் வராமல் இருப்பதால் வட்டி விகிதம் உயரும் என்று தெரிகிறது. இது கடன் வாங்கியோர் மற்றும் வாங்குவோருக்கு அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது.