மத்திய ரிசர்வ் வங்கி தொடர்ச்சியாக ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வந்ததால் எஸ்பிஐ வங்கி அவர்களுடைய Fixed Deposit வட்டியை உயர்த்தியது. அதோடு நிறுத்தாமல் அம்ரித் கைலாஷ் எனும் பெயரில் 7.1% வட்டி வழங்கும் சிறப்பு திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் மார்ச்-31 தேதியோடு நிறைவடைகிறது. ஆகவே உடனே பயன்பெறுங்கள். சாதாரணமாக 5 ஆண்டுகளுக்கு 6.5% வட்டி வழங்குகிறது எஸ்பிஐ.

ரிசர்வ் வங்கி ஏப்ரல் மாதத்தில் ரெப்போ வட்டி விகிதத்தினை 25 புள்ளிகள் உயர்த்தும் என்று பேங்க் ஆப் பரோடாவின் தலைமை பொருளாதார நிபுணர் மதன் சப்னாவிஸ் தெரிவித்து இருக்கிறார். கடந்த வாரம் தான் அமெரிக்காவின் பெடரல் வங்கி வட்டி விகிதத்தினை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.