மோடி அரசானது பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் அமைப்புசாரா துறை ஊழியர்கள் மற்றும் விவசாயிகள் தவிர்த்து திருமணமான பெண்களுக்கான திட்டத்தையும் அரசு அறிவித்து உள்ளது. அதிலும் பெண்களுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி பெண்ணுக்கு அரசாங்கத்திடமிருந்து ரூ.6000 வழங்கப்படும். முக்கியமான விஷயம் என்னவெனில் இத்திட்டத்தின் பலன் திருமணமான பெண்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

கர்ப்பிணி பெண்ணின் வயது குறைந்தது 19 வருடங்கள் இருக்க வேண்டும். இத்திட்டத்தில் நீங்கள் ஆப்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். அரசாங்கம் ரூ.6000-ஐ பெண்ணின் கணக்கில் 3 தவணைகளில் அனுப்பும். இந்த திட்டத்தில் பெண்களுக்கு முதற்கட்டமாக 1000 ரூபாயும், 2-ம் கட்டமாக 2000 ரூபாயும், கர்ப்பிணிகளுக்கு 3-ம் கட்டமாக 2000 ரூபாயும் வழங்கப்படுகிறது. கடைசியாக மீதம் இருக்கும் ரூ.1000-ஐ குழந்தை பிறக்கும்போது அரசு மருத்துவமனையால் வழங்கப்படும்.