சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, பார்ப்பவர்களின் ரத்தத்தைக் கொதிக்க வைத்துள்ளது. ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கனமான பொருட்களைச் சுமந்து வந்த தொழிலாளிக்கு, அங்கிருந்த மக்கள் லிஃப்ட் பயன்படுத்த அனுமதி மறுத்துள்ளனர். இதன் விளைவாக, அந்தத் தொழிலாளி ஆறாவது மாடி வரை தனது முதுகில் பாரத்தைச் சுமந்தபடி படிக்கட்டுகள் வழியாக ஏறிச் சென்றுள்ளார்.
இந்தச் சம்பவம் எங்கே நடந்தது என்ற விவரங்கள் முழுமையாகத் தெரியவில்லை என்றாலும், உழைக்கும் வர்க்கத்தினர் மீது காட்டப்படும் இத்தகைய பாரபட்சமும் மனிதாபிமானமற்ற அணுகுமுறையும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Packers and movers not allowed to use lift by society members, ad delivery guy had to use stairs to bring heavy stuff to 6th floor. pic.twitter.com/ILAOaGNS6Q
— AbhishekkkK (@Abhishekkkk10) January 30, 2026
“>
மேலும் “பணம் இருந்தால் மட்டும் போதாது, மனித நேயமும் வேண்டும்” என இணையவாசிகள் கடுமையாகச் சாடி வருகின்றனர். சொகுசு வாழ்க்கை வாழும் மக்கள், தங்களுக்குச் சேவை செய்யும் உழைப்பாளர்களைத் தரக்குறைவாக நடத்துவது அநாகரிகமானது எனப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் எந்திரத்தனமான இந்த உலகில் சக மனிதனின் வலியை உணராத இத்தகைய போக்கு மாற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. உழைப்பவர்களின் உழைப்புக்கு மரியாதை கொடுக்காவிட்டாலும், குறைந்தபட்சம் அவர்களை மனிதர்களாகவாவது நடத்த வேண்டும் என்பதே அனைவரின் ஆதங்கமாக உள்ளது.
