தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 திரைப்படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகும் சூர்யா 42 படம்  10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பவானி ஹீரோயினாக நடிக்கும் நிலையில் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வெற்றிமாறன் மற்றும் சூர்யா கூட்டணியில் வாடிவாசல் என்ற திரைப்படம் வெளியாகும் என அறிவிப்பு வெளியானது.  இந்த படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது

‘வாடிவாசல்’ படத்தில் காளையின் பயிற்சிக்காக மட்டும் 1 கோடி பட்ஜெட் ஆகியுள்ளதாக, படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கூறியுள்ளார். பேட்டி ஒன்றில் பேசிய அவர், ‘வாடிவாசல்’ படத்தில் காளை வரும் சீன்கள் மிக முக்கியமானவை. இதனால், அதற்கான CG வேலைகள் தற்போது லண்டனில் வேகமாக நடைபெற்று வருகிறது. படத்தில் காளை சீன்கள் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளதால், படக்குழு தீவிரமாக உழைத்து வருகிறது என்றார்.