சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ, பார்ப்பவர்களை அச்சத்திலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது.
அந்த வீடியோவில், ஒரு வயலில் நூற்றுக்கணக்கான பாம்புகள் வெளியே வந்து இடம் அறியாமல் சுழலும் காட்சிகள் பதிவாகியுள்ளன. அந்த வயலின் நடுவே ஒரு ஜேசிபி வாகனம் நின்றிருந்தாலும், பாம்புகளின் பரவலால் நகர முடியாமல் நிலைத்திருப்பது போன்ற காட்சிகள் இது. பொதுவாக, மழைக்காலத்தில் சில பாம்புகள் வெளியே வருவது இயற்கையாகவே நடைபெறுகிறது. ஆனால் இவ்வளவு அதிகமான பாம்புகள் ஒரே நேரத்தில் வெளிப்படுவதைப் பார்க்கும் போது, இயற்கையே இது எப்படி சாத்தியமாக்கியது என்ற கேள்வியும் எழுகிறது.
இந்த வீடியோ, Instagram-ல் “mgtc_farming” என்ற பக்கத்தில் “JCB பண்ணையில் இருந்து இவ்வளவு பாம்புகளை மீட்டது ஏன்?” என்ற தலைப்புடன் பகிரப்பட்டுள்ளது. தற்போது, இந்த வீடியோக்கு 79 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள், 2 லட்சத்துக்கும் மேல் லைக்கள் கிடைத்துள்ளன. இதையடுத்து, இணையவாசிகள் இது உண்மையா, இல்லை செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டதா என விவாதிக்கத் தொடங்கியுள்ளனர்.
பலர், “இது உண்மையான நிகழ்வு என்றால், அப்புறம் அந்த இடத்தில் யாரும் வசிக்கவே முடியாது” என்று பயமுடனும், சிலர் “AI வீடியோ போலவே இருக்கிறது” என்றும் எழுதியுள்ளனர். எனினும், வீடியோ எடிட்டிங் சாமர்த்தியம் இன்று எந்த அளவுக்கு சென்றுவிட்டது என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.
View this post on Instagram
“>
இந்த வீடியோவைப் பார்த்த பலரும் அதிர்ச்சி மற்றும் கலக்கலான எதிர்வினைகளை வெளிப்படுத்தியுள்ளனர். ஒருவர், “இது உண்மையா என்றே என்னால் நம்ப முடியவில்லை. இப்படியான இடத்துக்கு நான் வாழவே செல்ல மாட்டேன்” எனக் கூறியுள்ளார். மற்றொருவர், நகைச்சுவையாக, “சேர், இதெல்லாம் எடிட் பண்ணாதீங்க. இல்லனா நம்ம கண்களில் பாம்பு வரத் தொடங்கும்” என்று எழுதியுள்ளார்.
சமூக ஊடகங்களில் வைரலாகும் இந்த வீடியோ உண்மைதான் என்றாலும், அத்தனை பாம்புகள் ஒரே இடத்தில் வெளியே வருவது அபூர்வமானது. இது இயற்கையின் மர்மத்தை உணர்த்துவதோடு, மனிதர்கள் விலங்குகளின் இருப்பிடங்களில் அதிகமாக குறுக்கீடு செய்கிறோம் என்ற வருத்தத்தையும் கிளப்புகிறது.
