வேலை நேர்காணலில் சம்பளம், பதவி உயர்வு, வேலைக்கு உகந்த சூழல் போன்றவை குறித்து நேர்காணல் கலந்தவர் பேசுவது வழக்கமான ஒன்று. ஆனால் சமீபத்தில் டெல்லியை தளமாகக் கொண்ட ஒரு தனியார் நிறுவனத்தில் நடந்த நேர்காணல், அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த சம்பவத்தில், ஒரு நபர்  நேர்காணலுக்கு சென்றபோது, HR அவரிடம் எதிர்பார்ப்புகளைப் பற்றி கேட்டார். அதற்கு அவர் “மழை உதவித்தொகை” வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இந்த பதிலைக் கேட்ட HR சில விநாடிகள் மெளனமாகிப் பின்னர், “மழை உதவித்தொகையா?” என்று இரண்டு முறை கேட்டாராம். இது சம்பந்தமான பதிவு தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Reddit தளத்தில் இந்த சம்பவத்தை பகிர்ந்த அந்த HR, “நேற்று ஒரு நபரை  நேர்காணல் செய்தேன். சம்பள எதிர்பார்ப்பு கேட்டபோது, அவர் கூடுதலாக “மழைக்காலத்தில் போக்குவரத்து செலவு அதிகமாகும், அதனால் மழை உதவித்தொகை வேண்டும்” எனக் கேட்டார். முதல் பார்வையில் இந்தக் கோரிக்கை சில்லறைமாய் இருந்தாலும், அவர் கூறிய காரணம் கேட்டு உண்மையாகவே யோசிக்க வைக்கும்,” என பதிவிட்டுள்ளார்.

மேலும் அந்த வேட்பாளர், “மழைக்காலத்தில் ஓலா/உபர் டாக்ஸிகள் சர்ஜ் பிரைஸிங் காரணமாக இரட்டிப்பு கட்டணம் வசூலிக்கின்றன, எனவே அது என் மாத வருமானத்தில் சுமையாகிறது. இதனால் மழை உதவித்தொகை, அல்லது வேலை நேர சலுகை தேவை,” என கூறியுள்ளார்.

அதே HR, “அந்த வேட்பாளர் உண்மையில் நேர்மையாகவும், நியாயமான கோணத்தில் அந்த கோரிக்கையை முன்வைத்தார். அவரது பயணச் செலவுகளை நாங்கள் கணக்கிட்டோம், உண்மையில் அது இரட்டிப்பு செலவாகவே இருந்தது. ஜூலை மாத மழை காரணமாக, அவர் வெறும் 15 நாட்களில் மாதாந்திர போக்குவரத்து செலவை முடித்துவிட்டார்” என தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் வேலை வாய்ப்பு சந்தையில் நேர்காணல் கலந்தவர் மற்றும்   நிறுவனங்களும் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளவேண்டிய தேவையை மிகச் சிறப்பாக எடுத்துக் காட்டுகிறது. மழை உதவித்தொகை கேட்கும் நவீன கோணமும், அதன் பின்னுள்ள நியாயங்களும் சமூகத்தில் புதிய விவாதங்களை தூண்டியுள்ளது.