சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், ஆட்டோ டிரைவர் ஒருவர் பெண் பயணியிடம் தனது வாழ்க்கை அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார். தான் முன்பு அரசு வேலையில் இருந்ததாகவும், ஆனால் அந்த வேலையில் சுதந்திரம் இல்லாததால் அதை விட்டுவிட்டு ஆட்டோ ஓட்ட வந்ததாகவும் அவர் கூறி அனைவரையும் அதிர வைத்துள்ளார். ”வாழ்க்கையில் பணம் மட்டுமே முக்கியமல்ல, மன நிம்மதியும் சுதந்திரமும் தேவை” என்று கூறும் அவர், அரசு வேலையில் கிடைத்த வருமானத்தை விட இப்போது ஆட்டோ ஓட்டுவதன் மூலம் 5 நாட்களிலேயே 1500 ரூபாய் சம்பாதிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வேலையின் மூலம் கிடைத்த வருமானத்தில் 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான டிராக்டரை வாங்கியுள்ளதாகவும் அவர் பெருமிதத்துடன் கூறுகிறார். யாருடைய உத்தரவுக்கும் கட்டுப்படாமல், தனக்கு விருப்பமான நேரத்தில் உழைக்கும் இந்த சுதந்திரமே தனக்கு மிகுந்த மனநிறைவைத் தருவதாக அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
