சமூக வலைதளங்களில் மனிஷ் அஸ்வர் என்ற இளைஞர் தனது பிளிங்கிட் (Blinkit) டெலிவரி வேலையின் முதல் நாள் அனுபவத்தைப் பகிர்ந்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது. தனது நண்பருடன் சைக்கிளில் சென்று டெலிவரி செய்யும் மனிஷ், தான் ஒன்றரை மணிநேரத்தில் 65 ரூபாய் சம்பாதித்ததாக மிகுந்த மகிழ்ச்சியுடன் கூறுகிறார். “எந்த ஒரு வேலைக்கும் வெட்கப்படக் கூடாது, பகுதிநேரமாக எதை வேண்டுமானாலும் செய்யலாம்” என்ற அவரது நேர்மையான பேச்சு மற்றும் முகத்தில் மாறாத புன்னகை பலரது மனதையும் வென்றுள்ளது.
தனது அண்டை வீட்டாருக்கே தற்செயலாக டெலிவரி செய்த சுவாரஸ்யத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, அதை எவ்வளவு மகிழ்ச்சியுடன் செய்கிறீர்கள் என்பதே முக்கியம்” என மனிஷின் நேர்மறை எண்ணத்தைப் பாராட்டி வருகின்றனர்.
