இந்திய திருமணங்களில் உணவும், பாரம்பரியமும், விருந்தோம்பலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால், சமீபத்தில் வைரலான ஒரு வீடியோவில், உணவுப் பரிமாற்றத்தின் போது ஒரு பெண்ணின் அதிர்ச்சியளிக்கும் செயல்பாடு சமூக ஊடகங்களில் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்ட அந்த வீடியோவில், ஒரு திருமண விழாவில் உணவு பரிமாறிக் கொண்டிருந்த பெண் ஒருவர், லெக் பீஸ்-ஐ டிஷ்யூ பேப்பரில் சுற்றி, அதை யாரும் கவனிக்காமல் தன் கைப்பையில் பதுக்குவதை காணலாம். அதைச் செய்யும் முன், சுற்றிலும் யாரும் கவனிக்கவில்லையா என்று நிமிர்ந்து பார்த்த பின்னரே அந்த செயலை செய்து முடிக்கிறார்.

இந்த வீடியோ வைரலானதுடன், பலரும் அதனை நகைச்சுவையான தருணமாக கருதி கருத்துகளை பகிர்ந்துள்ளனர். “மாமியாருக்குத்தான் எடுத்து போறாங்களாம்”, “திருமணங்களில் இப்போது இது சாதாரணமா?” எனும் கருத்துக்கள் வைரலாகிறது.

 

மேலும் வீடியோவைப் பார்த்த சிலர், “இது தவறான பழக்கத்தை ஊக்குவிக்கக்கூடியது” எனக் கண்டனமும் தெரிவித்துள்ளனர். ஆனால், மற்றொரு பக்கம், “அவ்வளவாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை, இது நகைச்சுவையடைய விளையாட்டுத்தனமான செயல்” என நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.