பீகார் மாநிலம் கடிஹார் மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தாரிக் அன்வர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தைப் புரிந்துகொள்ள, மணிஹாரி பகுதியில் உள்ள துர்யாஹி பஞ்சாயத்திற்கு சென்றார். அந்தப் பகுதி வெள்ள நீர் வடியாமலும், மண்ணரிப்பு பிரச்சனையாலும் பாதிக்கப்பட்டுள்ளது. சேறும், தண்ணீரும் தேங்கியிருக்கும் நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தாரிக் அன்வரை தங்கள் முதுகில் சுமந்து, வெள்ளத்தின் தாக்கத்தைக் காட்டினர்.
இதைப் பதிவு செய்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த வீடியோவில், சிலர் நாடாளுமன்ற உறுப்பினரை முதுகில் சுமந்து, சேறும் தண்ணீரும் கலந்த பகுதியை கடந்து செல்வது தெரிகிறது. அவரது பாதுகாவலர், கால்சட்டையை மடித்து, கையில் காலணியை ஏந்தியபடி பின்னால் வருகிறார்.
नेता जी जनता पर ऐतना एहसान मत कीजिए, जो आपके भोझ तले दब जाएँ…
बिहार के कटिहार से सांसद तारिक अनवर ने बाढ़ पीड़ित लोगों के कंधों पर बैठ कर बाढ़ प्रभावित क्षेत्र का निरीक्षण किया। @INCIndia pic.twitter.com/Ptg9iUX3HT
— Nishant Azad/निशांत आज़ाद🇮🇳 (@azad_nishant) September 8, 2025
இந்த வீடியோ பரவிய பிறகு, மக்கள் பலவிதமாக கருத்து தெரிவிக்கின்றனர். சிலர் அந்தப் பகுதியின் மோசமான நிலையைப் பற்றி பேச, மற்றவர்கள் தாரிக் அன்வரின் மக்கள் பணியை பாராட்டுகின்றனர். இப்படி கடினமான சூழலிலும் மக்களைச் சந்திக்கும் அவரது உறுதியை பலர் புகழ்கின்றனர். ஆனாலும் அவர் மக்களின் தொழில் பயணித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
