இந்தியாவுக்கு வரும் ஒவ்வொரு பயணியும் இங்கிருந்து மறக்க முடியாத நினைவுகளை சுமந்து செல்கிறார்கள். ஆனால், சிலர் இந்தியாவின் மண்ணையும், மக்களையும் கண்டு மனதை பறிகொடுத்து இங்கேயே தங்கிவிடுகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு கதைதான் ரஷ்யாவைச் சேர்ந்த யூலியா அஸ்லமோவா (Iuliaa Aslamova) எனும் பெண்ணுடையது.

ஒரு வருடம் மட்டும் இந்தியாவில் தங்கலாம் என வந்த யூலியா, கடந்த 11 ஆண்டுகளாக இங்கேயே வாழ்ந்து வருகிறார். இந்தியாவின் மீதான தனது காதலை இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவாக பகிர்ந்த அவர், பெங்களூரு இப்போது தனது இல்லமாக மாறிவிட்டதாக உணர்ச்சி பொங்க கூறுகிறார். இந்திய உடையில், நெற்றியில் பொட்டு வைத்து பகிர்ந்த புகைப்படத்துடன், இந்தியா தனக்கு மூன்று அற்புத பாடங்களை கற்றுத் தந்ததாக அவர் உருக்கமாக எழுதியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Iuliia Aslamova (@yulia_bangalore)

முதலாவதாக இணையற்ற விருந்தோம்பல் இந்தியாவின் உண்மையான விருந்தோம்பலை யூலியா முதலில் உணர்ந்தார். இங்கு மக்கள் இதயப்பூர்வமாக வரவேற்கிறார்கள் என்கிறார் அவர். பயணத்தில் வழி கேட்பது, பொருட்கள் எடுக்க உதவி கேட்பது அல்லது அந்நியருக்கு ஆதரவு தேவைப்படுவது என எதுவாக இருந்தாலும், இந்தியர்கள் விருந்தினரை கடவுளாக மதிக்கின்றனர்.

இரண்டாவதாக இந்தியா ஒரு காந்த சக்தி கொண்ட நாடு என்கிறார் யூலியா. நீங்கள் எந்த மனநிலையுடன் இங்கு வருகிறீர்களோ, அதற்கு ஏற்றவர்கள் உங்களை தேடி வருவார்கள். எதிர்மறை எண்ணங்களுடன் வந்தவர்களுக்கு அதுவே கிடைத்தது, ஆனால் நேர்மறை உணர்வுடன் வந்த தனக்கு அப்படியே அனுபவங்கள் அமைந்ததாக அவர் கூறுகிறார்.

மூன்றாவதாக இந்தியா மிகவும் பாதுகாப்பானது  இது ஆச்சரியமாக இருந்தாலும், பாதுகாப்பு என்பது ஒருவரின் மனப்போக்கை பொறுத்தது என்கிறார். பயமும் எதிர்மறையும் இருந்தால் அப்படியே அனுபவம் அமையும்; ஆனால், நம்பிக்கையும் திறந்த மனதும் இருந்தால், இந்தியா பாதுகாப்பான, இதமான இடமாக தோன்றும் என்கிறார்.