பொதுவாகவே சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகள் அந்தந்த படத்தின் கதைக்கு  ஏற்றாற்போல எப்படிவேண்டுமானாலும் நடித்து தான் ஆக வேண்டும். பெரும்பாலும் ஒரு சில படங்களில் முத்த காட்சிகள் இருக்கும். அந்தவகையில் ஹிந்தி நடிகை நீனா குப்தா பல ஆண்டுகளுக்கு முன் நடிகர் திலீப் தவானுடன் முத்த காட்சியில் நடித்த பின் டெட்டால் ஊற்றி வாயை கழுவியதாக சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

63 வயதாகும் நீனா குப்தா 80களில் முன்னணி நடிகையாக இருந்தார். தனது முதல் லிப் லாக் காட்சியின் போது நடந்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார். தெரியாத ஒரு நபரை முத்தமிடுவது தனக்கு கடினமாக இருந்தது என வேதனை தெரிவித்துள்ளார்.