அமெரிக்கா அலாஸ்கா மாகாணத்தில் வசித்து வருபவர் பிரையன் ஸ்டீவன் ஸ்மித். 52 வயதான இவருடைய செல்போனை திருடிய பெண் ஒருவர், அதில் ஒரு பெண்ணை ஸ்மித் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வீடியோக்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து அப்பெண் போலீசாரிடம் கூறவே, ஸ்மித்தை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது இது மட்டுமின்றி சாலையோரம் வசிக்கும் பெண்ணை மது வாங்கித்தருவதாக கூறி வீட்டிற்கு அழைத்து சென்று, அந்த பெண்ணை குளிக்க சொன்னபோது மறுத்ததால் துப்பாக்கியால் சுட்டு கொன்றதாக கூறியுள்ளார். தற்போது அவருக்கு 226 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.