லைக்கா தயாரிப்பில் மகிழ் திருமேனி டைரக்டில் முதல் முறையாக அஜித் நடிக்க இருக்கும் படம் விடா முயற்சி. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அதோடு பல வருடங்களுக்கு பின் விடா முயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை.

கடந்த சில தினங்களாக விடா முயற்சி படம் நின்றுபோய் விட்டதாக ஷாக்கிங் தகவல் வெளிவந்தது. இருப்பினும் அது உண்மையில்லை. வரும் ஜூன் முதல் வாரத்திலிருந்து விடா முயற்சி படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில், இதற்கான வேலைகள் நடந்து வருகிறது. ஆகவே படம் நின்றுபோய் விட்டது என பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்பது குறிப்பிடத்தக்கது.