தெலுங்கு திரையுலகில் பிரபலமான ‘பசிங்கா பாலலு’ பாடலின் மூலம் அறியப்பட்ட நடிகர் ஈஸ்வர் சாய், தற்போது தனது சொந்த வாழ்க்கை தொடர்பான ஒரு பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஏற்கனவே திருமணமாகி ஒரு மகனும் உள்ள இவர், சக நடிகையுடன் ஒரே அறையில் இருந்தபோது அவரது மனைவியிடம் கையும் களவுமாக சிக்கிய வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் புகழ்பெற்ற ஈஸ்வர் சாய், சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் கலக்கி வந்தார். இவரும், தெலுங்கு ரியாலிட்டி ஷோக்கள் மூலம் பிரபலமான ஒரு சக நடிகையும் இணைந்து சில ஆல்பம் பாடல்களில் நடித்துள்ளனர். அப்படி அவர்கள் இணைந்து பணியாற்றிய புதிய ஆல்பம் ஒன்று ரிலீஸாகும் தருவாயில் இருந்தநிலையில், இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

 

ஈஸ்வர் சாயும் அந்த நடிகையும் ஒரு ஓட்டல் அறையில் தனியாக இருப்பதாக அவரது மனைவிக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. உடனே அந்த இடத்திற்குத் துணிச்சலாகச் சென்று சோதனையிட்ட அவரது மனைவி, இருவரும் அரைகுறை ஆடையுடன் ஒரே அறையில் இருப்பதை நேரில் பார்த்து அதிர்ந்துபோனார். அந்தத் தருணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனைத் தொடர்ந்து ஊடகங்களிடம் பேசிய ஈஸ்வர் சாயின் மனைவி கண்ணீர்மல்கக் கூறியதாவது, என் கணவர் மிகவும் நல்லவர், அவர் எப்போதுமே தவறு செய்ததில்லை. அந்த நடிகைதான் வேண்டுமென்றே என் கணவரை தன் வலையில் வீழ்த்தி அடிபணிய வைத்துள்ளார். எங்களுக்குத் திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகின்றன. எங்களது நிம்மதியான குடும்ப வாழ்க்கைக்கு அந்த நடிகைதான் எமன்போல வந்து அனைத்தையும் கெடுத்துவிட்டார்.

மேலும், “கடந்த காலத்தில் அந்த நடிகை தன் காதலில் பிரிந்து தவித்தபோது, நான் மட்டும்தான் அவருக்குத் தோள் கொடுத்து ஆறுதல் சொன்னேன். ஆனால், அன்று எனக்கு ஆதரவாக இருந்தவரே இன்று என் முதுகில் குத்துவாள் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை” என்று கதறி அழுதார். இந்தச் சம்பவம் தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.