தற்போதைய பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் சில நேரங்களில் வரம்பை மீறி நடந்து கொள்வதாக பார்வையாளர்கள் குற்றச்சாட்டு எழுப்பி வருகின்றனர்.

குறிப்பாக ஆதிரை மற்றும் எஃப்ஜே (FJ) இடையிலான உறவில் ஏற்பட்ட மனக்கசப்பு தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. கடந்த சில நாட்களாக இவர்களுக்கிடையிலான உரையாடல்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு சென்றுள்ளதாக ரசிகர்கள் குறிப்பிடுகின்றனர். இதை உணர்ந்த எஃப்ஜே, ஆதிரையிடமிருந்து தூரம் நிற்க ஆரம்பித்ததாகவும் கூறப்படுகிறது.

“>

சமீபத்திய எபிசோடில், ஆதிரை சாப்பிடும் போது எஃப்ஜே ஐ அருகில் வந்து அமருமாறு அழைத்துள்ளார், பதிலுக்கு அவர் “ஏன் அக்கா?” என சற்றே சிரித்தபடி கேள்வி எழுப்பியதும், ஆதிரை திடீரென கோபமடைந்து அந்த இடத்தை விட்டு எழுந்து செல்கிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள், “அக்கா என்று அழைத்ததில் என்ன தவறு? இதனால் அவ்வளவு ஆத்திரமா?” என விமர்சித்து வருகின்றனர்.

மேலும், “இப்போதாவது அந்த பையனுக்கு எது சரி, எது தவறு என புரிந்திருக்கும்” என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். அந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி, பிக் பாஸ் ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.