“டியூட்” திரைப்படம் வெளியானதிலிருந்து வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சிறந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. எனினும், சிலர் இந்த படம் நமது பாரம்பரியத்துக்கும் கலாச்சாரத்துக்கும் எதிராக இருப்பதாக கூறி சமூக வலைதளங்களில் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, படத்தின் இயக்குனர் சமீபத்தில் நடைபெற்ற ஒரு மேடை நிகழ்ச்சியில் தன் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறியதாவது: “இந்த படத்தின் இறுதியில் வரும் ‘உங்கள் ஆணவத்திற்காக கொலை செய்வீர்களா? அவ்வளவு அவமானமாக இருந்தால் நீங்கள் போய் சாவுங்கடா!’ என்ற வசனம் ஆரம்பத்தில் நாங்கள் எழுத நினைத்தது அல்ல. ஆனால் படம் உருவாகிக் கொண்டிருந்த நேரத்தில் கவின் ஆணவக் கொலை சம்பவம் நடந்தது. அந்த சம்பவம் என் மனதை நெருடியது. அதிலிருந்து தான் இந்த வசனம் வந்தது” என அவர் தெரிவித்துள்ளார்.
‘Unga aanavathukka kolai pannuveengalada? Avlo aanavam irundha neenga poi saavungada!’ wasn’t originally part of Dude. We added it after witnessing the honour killing of Kavin. It was @pradeeponelife who strongly insisted on including that dialogue. 👏🏻👌🏻pic.twitter.com/fLwgzhwxGq
— KARTHIK DP (@dp_karthik) October 22, 2025
“>
இயக்குனரின் இந்த விளக்கம் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. நெட்டிசன்கள் பலரும், “இந்த வசனம் ஆணவக் கொலைகளை எதிர்த்து சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வலுவான செய்தி” என ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும், “கவின் போன்ற இளைஞர்களின் உயிரைப் பறிக்கும் ஆணவக் கொலைகளை எதிர்த்து கலைஞர்கள் தங்கள் படைப்புகளின் மூலம் குரல் கொடுப்பது பாராட்டத்தக்கது” என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, வருகிறது.
