நடிகர் விக்ரம் சமீபத்தில் தனது மகன் துருவ் விக்ரம் குறித்து எடுத்திருக்கும் ஒரு சிறப்பு நடவடிக்கை இணையத்தில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இன்ஸ்டாகிராம் தளத்தில் சமீபத்தில் அறிமுகமான “ரீ ட்வீட்” வசதி (ட்விட்டரில் உள்ளதைப் போன்றது) மூலம், பயனர்கள் தங்களுக்கு பிடித்த வீடியோக்களை தங்களது பக்கத்தில் பகிர முடிகிறது. இந்த வசதி அறிமுகமாகி ஒரு மாதம் கடந்திருந்தாலும், இதுவரை அதை பயன்படுத்தாத நடிகர் விக்ரம், தனது மகனுக்காக முதன்முதலாக இதனைப் பயன்படுத்தியுள்ளார்.
View this post on Instagram
“>அவரது மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள “பைசன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு வீடியோவை விக்ரம் ரீட்வீட் செய்துள்ளார். அந்த காட்சியில், துருவ் பேருந்துக்கு இணையான வேகத்தில் ஓடும் காட்சியால் ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். இந்த காட்சி, அவரது கடின உழைப்பையும் திரைப்படத்திற்காக எடுத்துள்ள உடல் உழைப்பையும் வெளிப்படுத்தும் விதமாக உள்ளது. தந்தையாக மகனின் முயற்சியை பாராட்டும் வகையில் விக்ரம் இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீட்வீட் செய்துள்ளார்.
அவரது பக்கத்தை பார்ப்பவர்களுக்கு இது அவரால் முதன்முதலில் ரீட்வீட் செய்யப்பட்ட வீடியோவாக காணப்படுகிறது. இதன் மூலம் “தனது மகனுக்காக இதுவரை செய்யாததை முதன்முதலாக செய்துள்ளார் விக்ரம்” என ரசிகர்கள் பெருமையாகக் குறிப்பிடுகின்றனர்.
