ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் உதவிகள் கிடைக்கும் என்று பீகார்  மாநில முதல்வர் அறிவித்துள்ளார். அந்த மாநிலத்தில் பெரும்பாலான மக்களுக்கு சுகாதார சேவைகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் மாநிலத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஒவ்வொரு வருடமும் 5 லட்சம் காப்பீட்டில் இலவச சிகிச்சை அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதனால் மாநிலத்தில் சுமார் 1.2 கோடி மக்கள் இந்த திட்டத்தின் கீழ் காப்பீடு வசதியை பெறுவார்கள்.