மொபட்டும் மோட்டார் சைக்கிளும் எதிரெதிரே மோதி விபத்துக்குள்ளானதில் விவசாயி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் அருகே நஞ்சுண்டாபுரம் பகுதியில் ராமசாமி(75) என்பவர் வசித்து வந்தார். இவர் காளப்பநாயக்கன்பட்டியில் இருந்து நேற்று காரவள்ளிக்கு செல்லும் பிரதான சாலையில் மொபட்டில்  சென்று கொண்டிருந்தபோது ஆத்துக்குட்டி பள்ளம் என்ற இடத்தின் அருகே அவருடைய மொபட்டும், எதிரே வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த ராமசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராமசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.