நாளை முதல் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் ஜி20 மாநாடு நடக்கும் இடம், பிரதிநிதிகள் தங்கும் விடுதி உள்ளிட்ட 5 இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை காலை முதல் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என ஆட்சியர் வல்லவன் தெரிவித்துள்ளார்.

ஜி20 நாடுகளின் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு இந்தியாவுக்கு இந்த முறை வழங்கப்பட்டுள்ளது. இதனால் வரும் நவம்பர் 2023 வரை இந்தியாவின் 56 நகரங்களில் 200க்கும் மேற்பட்ட நிகழ்வுகள், கருத்தரங்குகள் நடைபெறுகிறது. சென்னை, கோவை, திருச்சி, தஞ்சை உள்ளிட்ட நகரங்களிலும், புதுச்சேரியிலும் நிகழ்வுகள் நடக்கின்றன.