தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்றாக மாமல்லபுரம் இருக்கிறது. இங்கு கடற்கரை கோவில், வெண்ணை உருண்டை பாறை, அர்ஜுனன் தபசு, ஐந்து ரதம் போன்ற பல்வேறு புராதான சின்னங்கள் இருக்கிறது. இந்த புராதான சின்னங்களை காண்பதற்காகவும் கடற்கரையின் அழகு ரசிப்பதற்காகவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மாமல்லபுரத்திற்கு செல்வார்கள்.

இங்கு விடுமுறை மற்றும் பிற பண்டிகை நாட்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிக அளவில் இருக்கும். இந்நிலையில் பிப்ரவரி 1-ஆம் தேதி மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்படுவதாக தற்போது தொல்லியல் துறை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சர்வதேச ஜி-20 மாநாடு காரணமாக மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என்றும், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில் மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் வருவதால் பாதுகாப்பு கருதி மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.