ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மார்ச் இரண்டாம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவிக்க இருக்கிறார்கள். ஏற்கனவே இபிஎஸ் தரப்பில் 100 பேர் கொண்ட குழு தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என்று அறிவித்தார்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓ. பன்னீர்செல்வம் அணியின் 118 பேர்‌கொண்ட குழு தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளதாக தற்போது ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார். மேலும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவிக்கும் பட்சத்தில் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பாஜக வேட்பாளரை அறிவிக்கவில்லை என்று தெரிவித்தால் உடனடியாக ஓபிஎஸ் தேர்தல் வேட்பாளர் யார் என்பதை அறிவிப்பார் என்றும் ஜேசிடி பிரபாகர் கூறியுள்ளார். அதோடு ஓ. பன்னீர்செல்வத்திற்கு தேர்தல் வேலையை எப்போது தொடங்கினால் வெற்றிக் கனி கிடைக்கும் என்பது தெரியும் என்றும் கூறியுள்ளார்.