அ.தி.மு.க பொதுக்குழு வழக்கின் விசாரணை இன்று 2வது நாளாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது OPS தரப்பில் வாதம் செய்தபோது “பொதுச் செயலாளர் பதவியை குறுக்கு வழியில் பெற எடப்பாடி பழனிசாமி முயற்சிக்கிறார். அ.தி.மு.க-வில் தேர்தல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படும் ஒரே பதவி பொதுச் செயலாளர் மட்டுமே.
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தனக்கு வசதியாக கட்சி விதிகளில் திருத்தம் செய்துள்ளார். குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இபிஎஸ் செயல்படுவதாக ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் குற்றம்சாட்டியது. மேலும் 5 ஆண்டுகள் கட்சியின் முடிவுகளை ஒருங்கிணைப்பாளர்களே இணைந்துதான் எடுக்க வேண்டும் என்பது விதி என ஓபிஎஸ் தரப்பு வாதித்து வருகிறது. அதனை தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை நாளை தொடரும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.