கோகுல்ராஜ் கொலை வழக்கில் சாட்சியங்கள் மற்றும்  ஆதாரங்கள் அடிப்படை மட்டுமே தீர்ப்பு என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உணர்வுகளின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படாது, சாட்சிகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து செய்யக்கூடிய வழக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.

கோகுல்ராஜ் உடன் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கோயிலுக்கு செல்லும் வரை தான் சிசிடிவி காட்சி உள்ளது என ஹை கோர்ட் கூறி உள்ளது. சுவாதி – கோகுல்ராஜ் பேசியபோது தான் சென்று விசாரணை செய்ததை யுவராஜ் ஒப்புக்கொண்டார் என கோகுல்ராஜ் தாய் தெரிவித்துள்ளார். யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து செய்யக் கூடிய வழக்கில் நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறார்கள்.