பெங்களூருவில் இருந்து தமிழகம் நோக்கி காாரில் கொண்டு செல்லப்பட்ட கணக்கில் காட்டப்படாத ரூ.9 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவிலிருந்து ஓசூர் வழியாகத் தமிழகத்திற்குத் தடைசெய்யப்பட்ட அல்லது கணக்கில் வராத பணம் காரில் கொண்டு செல்லப்படுவதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதன்பேரில், பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓசூர் சாலை பி.இ.டி.எல் டோல்கேட் சிக்னல் அருகில் இரவு நேரத்தில் தீவிர வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த காரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர். தடுப்புக்காவலில் எடுக்கப்பட்ட அந்த வாகனத்தில் நடத்திய சோதனையில், மறைத்து வைக்கப்பட்டு இருந்த பல கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாகத் தூத்துக்குடியைச் சேர்ந்த சிந்து ஜூவல்லரி நிறுவனத்துடன் தொடர்புடைய 42 வயதுடைய சச்சின் உள்ளிட்ட இருவர் பிடிபட்டனர். இதனையடுத்து, வாகனம் மற்றும் பிடிபட்ட நபர்களை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.

“>

 

மேலும், இதன் தொடர்ச்சியாகத் தமிழகத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில் மேலும் சில லட்சங்கள் மற்றும் கோடிகளில் பணம் சிக்கியுள்ளதால், இவ்வளவு பெரிய தொகை எங்கிருந்து கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.