உறுதிப்பாடும் சாதிக்கும் வெறியும் ரத்தத்தில் ஊறியிருந்தால், வசதிகள் இல்லாதது ஒருபோதும் வெற்றிக்குத் தடையாக இருக்காது” என்பதை நிரூபிக்கும் வகையில், உலகின் மிகக் கடினமான தேர்வாகக் கருதப்படும் சீனாவின் தேசியக் கல்லூரி நுழைவுத் தேர்வில், சொந்தமாக ஸ்மார்ட்ஸபோனோ அல்லது விலையுயர்ந்த பயிற்சி வகுப்புகளோ இன்றி 750க்கு 699 மதிப்பெண் பெற்ற ஏழை மாணவி.
சீனாவை சேர்ந்த மிகவும் ஏழ்மையான விவசாயக் கூலித் தொழிலாளியின் மகளான ஹானின் தாய், அன்கிலோசிங் ஸ்பான்டைலிடிஸ் என்ற கொடூரமான முதுகெலும்பு நோயால் படுக்கையில் முடங்கியுள்ளார்; தன் தாயின் வேதனையை அருகிலிருந்து பார்த்ததால் எப்படியாவது மருத்துவராகி தங்களைப் போன்ற ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற லட்சியத்தோடு, பள்ளி கொடுத்த இலவச விடுதி வசதியையும் புத்தகங்களையும் மட்டுமே நம்பி படித்து இந்த சாதனையை அவர் படைத்துள்ளார். இதனால் சீனாவின் புகழ்பெற்ற இரு பல்கலைக்கழகங்களில் அவருக்குச் சேர்க்க முன்வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது வெற்றியைத் தொடர்ந்து சமூக வலைதள வலைப்பதிவு செய்பவர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் அள்ளித் தந்த பல லட்ச ரூபாய் நிதியுதவியைத் தனது தன்மானத்திற்காகப் பணிபுரிந்தவுடன் மறுத்த ஹான், “இன்று கடினமாக உழைக்கவில்லை என்றால் நாளை பல போராட்டங்களைச் சந்திக்க நேரிடும், கல்வியால் மட்டுமே விதியை மாற்ற முடியும்” எனக் கூறி பகுதிநேர வேலை மூலம் தனது மேல் படிப்பைத் தொடர முழு உலக இளைஞர்களுக்கும் முன்மாதிரியாக தெரிவித்துள்ளார்.
