மகாராஷ்டிர மாநிலம் பிம்பிரி சிஞ்ச்வட் பகுதியில், ஆஷாடி ஏகாதசி வாரியின் போது புனிதப் பயணம் செல்லும் பல்லக்கு ஊர்வலத்திற்காகச் சாலையை போலீசார் தடுத்திருந்தனர்.
போக்குவரத்து மாற்றங்கள் குறித்து அறிவிக்கப்பட்டிருந்தும், ஓட்டுநர் பயிற்சி பள்ளி நடத்தும் பெண் ஒருவர் தனது காரில் அந்தத் தடை செய்யப்பட்ட பாதையில் செல்ல வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார். போலீசார் தடுத்தபோது அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்தப் பெண், ஒரு கட்டத்தில் சாலையில் படுத்துக்கொண்டு தர்ணாவில் ஈடுபட்டார்.
பின்னர், காரில் ஏறி போலீஸ் அமைத்திருந்த தடுப்புகளை காரால் மோதித் தள்ளிவிட்டு, அங்கிருந்த அதிகாரிகளின் எச்சரிக்கையையும் மீறி வேகமாகக் காரைச் செலுத்திச் சென்றார்.
இந்தச் சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. “மக்களுக்கு நான் டிரைவிங் சொல்லிக்கொடுக்க வேண்டும், என்னைக் கைது செய்தாலும் பரவாயில்லை, நான் செல்வேன்” என்று அந்தப் பெண் போலீசாரிடம் ஆவேசமாகப் பேசுவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
🚨 WATCH | Chaos at Pune’s Alandi Palkhi! A woman allegedly lay down on the road after police stopped her from entering the Palkhi route, then got into her car and sped through barricades despite repeated warnings. #Pune #AlandiPalkhi pic.twitter.com/eof2CZVLbk
— @Rationalviews (@pramod_writes) July 9, 2026
“>
புனிதப் பயணம் செல்லும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு இடையூறாக நடந்துகொண்ட அந்தப் பெண்ணின் செயல் பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து அலண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
